உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

மதுரை: பிரதம மந்திரியின் பயிர்காப்பீடு திட்டம் நடப்பு 2023 - 24ம் ஆண்டு ராபி பருவத்திற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பருவ பயிர்களான நெல் பயிருக்கு அறிவித்த 35 கிராமங்களில், ஏக்கருக்கு ரூ.529 காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் எனில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அல்லது தேசிய வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாதவர்கள் இ சேவை மையங்களிலும் காப்பீடு செய்யலாம்.தற்போது நெல் சாகுபடி செய்துள்ளவர்கள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய ஜன.31 கடைசி. பதிவு செய்யும்போது முன்மொழிவு படிவம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல், சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் நகல் இணைத்து வழங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !