ஸ்ரீவைகுண்டபதி கோயில் கும்பாபிஷேகம் நடத்த வழக்கு
மதுரை: துாத்துக்குடி பாலசுப்பிரமணியன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் கல் மண்டப புனரமைப்பு பணி துவங்கி 8 ஆண்டுகளாகிறது. நிதி பற்றாக்குறையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும். கண்காணிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகமது ஹனீப் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் அசோக்,'ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்ய அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது,' என்றார். நீதிபதிகள் கமிஷனர் செப்.25 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.