உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலையில் டிச., 3 ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஏற்பாடு செய்ய சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு மனு அனுப்பினேன். மலை உச்சியிலுள்ள (தர்காவிலிருந்து 15 மீ., தொலைவில்) தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற சட்ட ரீதியாக தடை இல்லை. பதிலாக மலையிலுள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது சட்ட விரோதம். தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை: தர்கா எல்லைக்குள் தீபத்துாண் உள்ளது. அங்கு தீபம் ஏற்ற முடியாது. வழக்கம் போல் மாற்று இடத்தில் தீபம் ஏற்றுவதில் ஆட்சேபனை இல்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றுவதற்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. ஏற்கனவே இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டபடி ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால்தான் தீர்வு கிடைக்கும் என்றார். நீதிபதி இன்று (நவ., 28) ஒத்திவைத்தார். இதுபோல் மதுரை விவேகானந்தன் தாக்கல் செய்த மற்றொரு மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன்,'கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கி விட்டது,' என்றார். நீதிபதிகள்,'தனி நீதிபதியிடம் இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது விழா துவங்கிவிட்டது. தேவையெனில் அடுத்த ஆண்டு மனு செய்யலாம். வழக்கு முடிக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை