உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, தேரோட்டம் இன்றும், நாளையும்(நவ.7,8) நடப்பதை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருநகரில் இருந்து மதுரை நகருக்கு வரும் வாகனங்கள் கிரிவல பாதை மற்றும் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் செல்ல அனுமதி இல்லை. ஜி.எஸ்.டி., ரோடு வழியாக மூட்டா தோட்டம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும். மதுரை நகரில் இருந்து திருப்பரங்குன்றம் மேம்பாலம் வழியாக திருநகர் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மூட்டா தோட்டத்தில் இருந்து ஜி.எஸ்.டி., ரோடு வழியாக திருநகர் செல்ல வேண்டும்.திருநகரில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் பூங்கா பஸ் ஸ்டாப் அருகில் உள்ள காலி இடத்திலும், தெப்பக்குளம் கட்டண 'பார்க்கிங்'கிலும் நிறுத்த வேண்டும். மதுரை நகரில் இருந்து வரும் பக்தர்களின் கார், வேன்கள் ஒக்கலிக்கர் மண்டபம் அருகில் உள்ள தெப்பக்குளம் கட்டண 'பார்க்கிங்'கிலும், டூவீலர்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச்சில் இருந்து மயில் மண்டபம் வரை ரோட்டின் இருபுறமும் 'சிங்கிள் பார்க்கிங்' ஆகவும் நிறுத்த வேண்டும்.மயில் மண்டபத்தில் இருந்து சன்னதி தெரு வரை, துணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து லாலா கடை வரை மற்றும் நான்கு ரத வீதிகளிலும் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்த அனுமதி இல்லை. அவனியாபுரம் பகுதியில் இருந்து நிலையூர், திருநகர் செல்லக்கூடிய பொது போக்குவரத்து இலகுரக வாகனங்கள் கே.வி. பள்ளியின் வலதுபுறம் திரும்பி தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு வழியாக ஜி.எஸ்.டி., ரோடு வழியாக செல்ல வேண்டும். மேற்படி ரோடு வழியாக வரும் கனரக வாகனங்கள் அவனியாபுரம் - முத்துப்பட்டி - திருப்பரங்குன்றம் ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகப்பன் நகர் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.கோயிலுக்கு வரும் அரசு வாகனங்கள் அருணகிரி திருமண மண்டப 'பார்க்கிங்'கில் நிறுத்த வேண்டும். மதுரை நகரில் இருந்து டூவீலரில் வரும் பக்தர்கள் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்த வேண்டும். ஹார்விபட்டி, நிலையூரில் இருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள் நிலையூர் சந்திப்பு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் 'பார்க்கிங்' செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை