உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வர் கோப்பை கிரிக்கெட்

முதல்வர் கோப்பை கிரிக்கெட்

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மதுரையில் நடந்தது. தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நடந்த இறுதிப் போட்டியில் சேலம், நாமக்கல் அணிகள் மோதின. சேலம் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 68 ரன் எடுத்தது. அபிநவ் ராஜேந்திரன் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய நாமக்கல் அணி 10 ஓவர்களில் 60 ரன் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் சேலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. மூன்றாமிடத்திற்கான போட்டியில் சென்னை, திருவள்ளூர் அணிகள் மோதின. திருவள்ளூர் அணி 8 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 57 ரன் எடுத்தது. முகுந்தா 21 ரன் எடுத்தார். அடுத்து ஆடிய சென்னை அணி 5.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாமிடம் பெற்றது. அனிருத் கிருஷ்ணன் 27 ரன் எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ