உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா

 கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா செயலாளர் இக்னேஷியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி தலைமையில் நடந்தது. அருளானந்தனர் கல்லுாரி பாதிரியார் பேசில் சேவியர் சிறப்புரையாற்றினார். மாணவிகள் டான்சிலா, பிருந்தா செலின் இறைவணக்க பாடல் பாடினர். மாணவப் பேரவை துணைத் தலைவர் சுசிராஸ்மி வரவேற்றார். ஏசுவின் குடில் அமைக்கப்பட்டு, அவரது பிறப்பு குறித்த பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல் நடன, நாடகம் நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர்கள் அருள்மேரி, வித்யா, பிந்து, நிகிலா, பேராசிரியைகள், அலுவலர்கள், மாணவிகள் பங்கேற்றனர். மாணவப் பேரவையின் இணைச் செயலாளர் நிவேதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை