மாநில ஹாக்கி : திருநகர் அணி சாம்பியன்
திருநகர் : சென்னையில் நடந்த மாநில அளவில் 17 வயதுக்குட்பட்டோர் பள்ளிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகளில் மதுரை திருநகர் இந்திராகாந்தி பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.முருகப்பா குரூப்ஸ், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் திருநகர் இந்திராகாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி 3-:2 என்ற கோல் வித்தியாசத்தில் வேலுார் அரசு பள்ளி அணியை வென்று சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது.இரண்டாவது முறையாக திருநகர் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்களை மூத்த பயிற்சியாளர் அழகப்பன், மதுரை மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ரமேஷ், பள்ளித் தலைமை ஆசிரியர் ராதிகா, நிர்வாகிகள் அரவிந்தன், கோபிசந்திரா, விளையாட்டு ஆசிரியர்கள் செல்லப்பாண்டி, வடிவேல், தங்கபாண்டியன், திருநகர் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் பாராட்டினார்.