உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கு முடித்துவைப்பு

வழக்கு முடித்துவைப்பு

மதுரை:மதுரை கோச்சடை ஜெயா என்பவர், தொடர்ந்த வழக்கில், 'நகை திருட்டு குறித்த வழக்கில், மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் என் மகனை சட்ட விரோத காவலில் துன்புறுத்தியதால், 2019 ஜன., 24ல் இறந்தார். எங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.வழக்கை, 2023 ஆக., 18ல் விசாரித்த நீதிபதி, 20 லட்சம் ரூபாயை அரசு வழங்க உத்தரவிட்டார். நிறைவேற்றாததால் உள்துறை செயலர் மீது அவமதிப்பு மனுவை ஜெயா தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அப்போது, 'வங்கி கணக்கில் 20 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது' என, அரசு தரப்பு கூறியதை பதிவு செய்து வழக்கு முடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !