உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமசபை கூட்டத்தில் இன்று காணொலி மூலம் முதல்வர் உரை 12 ஆயிரம் கிராமங்களில் ஏற்பாடு

கிராமசபை கூட்டத்தில் இன்று காணொலி மூலம் முதல்வர் உரை 12 ஆயிரம் கிராமங்களில் ஏற்பாடு

மதுரை: தமிழகத்தில் இன்று (அக்.11) நடக்கும் கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுடன் உரையாற்றுகிறார். குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம், காந்திஜெயந்தி போன்ற நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. கடந்த அக்.2 காந்தி ஜெயந்தி நாளில் இக்கூட்டம் நடக்க இருந்த நிலையில், கரூர் சம்பவத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. அக்கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் நடக்கிறது. இதில் முதன்முதலாக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்கிறார். 2021ல் தி.மு.க., ஆட்சியில் முதல் கூட்டம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் நடந்தது. அதில் முதல்வர் நேரடியாக பங்கேற்றார். இம்முறை அவர் காணொலி மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் பொதுமக்களுடன் நேரடியாக பேசுகிறார். மாதந்தோறும் பிரதமர் மோடி, 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுவது போல முதல்வரும் இக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அரசின் 'டான்பிட்' (தமிழ்நாடு பைபர் நெட்) நிறுவனம் செய்துள்ளது. இன்டர்நெட் வசதி இல்லாத கிராமங்களில் முதல்வர் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை