உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வணிக காஸ் சிலிண்டருக்கு   வரிவிலக்கு  காபி, -டீ வர்த்தகர்கள் வலியுறுத்தல்

வணிக காஸ் சிலிண்டருக்கு   வரிவிலக்கு  காபி, -டீ வர்த்தகர்கள் வலியுறுத்தல்

மதுரை : மதுரை காபி-, டீ வர்த்தகர் சங்க 36-வது ஆண்டு விழா தெப்பக்குளம் சந்திர குழந்தை திருமண மகாலில் நடந்தது. சங்கத் தலைவர் முத்து மாணிக்கம் துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரேஸ் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சங்கர், சுகுமாறன் முன்னிலை வகித்தனர். முன்னாள் செயலாளர் பாலசந்திரன் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.கூட்டத்தில், வணிக காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வரி விலக்கு அளிக்க வேண்டும், போலீசார் வர்த்தகர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது, மானியத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். காபி, டீ கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் செல்வக்குமார் ஒங்கிணைத்தார். துணைத் தலைவர் சோலைராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை