உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளிக்குடி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

கள்ளிக்குடி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு

திருமங்கலம் : கள்ளிக்குடி ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் பிரவீன் குமார் நேற்று ஆய்வு செய்தார். கூடக்கோவில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்த அவர் ஊராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கால்நடை மருத்துவமனையில் ஆய்வுக்கூடம், சிகிச்சை பிரிவு, மருந்தகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகளின் ஈர்ப்பு குறித்து கேட்டறிந்தார். பொது மக்களிடம் மருத்துவ சேவையின் தரம் குறித்து விசாரித்தார். கூடக்கோவில் ஊராட்சி நாடார்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதி மாணவர்களிடம் பாடம் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன் குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி வங்கியின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வழங்கப்படும் வேலைக்கான பலன், முதியோர் உதவி தொகையை பயோமெட்ரிக் மூலம் வழங்குவது குறித்து விசாரித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் வார்டு, பதிவு செய்யும் இடம், உள், வெளி நோயாளிகள் பிரிவுகளை ஆய்வு செய்தவர், மருத்துவமனை சேவைகள், குறைகள் குறித்து நோயாளிகளிடம் விசாரித்தார். ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். கள்ளிக்குடி ஒன்றியம் டி.புதுாரில் ரூ. 9.85 மதிப்பீட்டில் கட்டப்பட்டும் ரேஷன் கடையை பார்வையிட்டார். குராயூரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்கள் பதிவு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை