உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆலம்பட்டியில் கலெக்டர் ஆய்வு

ஆலம்பட்டியில் கலெக்டர் ஆய்வு

திருமங்கலம், : திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று கலெக்டர் பிரவீன் குமார் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் செயல்பாடு, வாசித்தல், எழுதுதல் அடிப்படை எண் அறிவு திறன் குறித்து கேட்டறிந்தார். காலை மற்றும் மதிய உணவுகள் முறையாக வழங்கப்படுகிறதா, உணவின் தரம் எவ்வாறு உள்ளது என்றும் ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு முழு அளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பயிற்சி வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தலைமையாசிரியர் அருள் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை