மேலும் செய்திகள்
கல்லுாரி கனவு நிகழ்ச்சி; கலெக்டர் ஆலோசனை
09-May-2025
மதுரை; தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'கல்லுாரி கனவு - 2025' எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை லேடிடோக் கல்லுாரியில் துவங்கியது.கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்து பேசியதாவது: பிளஸ்2 முடித்த மாணவர்கள் உயர்கல்வியின் கனவை நனவாக்க உதவும் வழிகாட்டும் திட்டம் இது. மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு பயிலும் 3,668 பேர், கடந்தாண்டு உயர்கல்வியில் சேராத 529 பேர், 11, 10ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதோர் 77 பேர், பெற்றோரை இழந்து தவிக்கும் 125 மாணவர்கள் உட்பட 4399 மாணவர்களுக்கு மூன்று கட்டமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக மேலுார் மாணவர்கள் 359 பேர், கொட்டாம்பட்டி 229, மதுரை கிழக்கு 282, மேற்கு 397, வடக்கு 439 என மொத்தம் 1,406 மாணவர்கள் பங்கேற்கின்றனர். மே 16ல் மன்னர் கல்லுாரி நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் மாணவர்கள் 145 பேர், டி.வாடிப்பட்டியில் 273, திருமங்கலம் 432, மதுரை தெற்கு 415, அலங்காநல்லுார் 336 என மெத்தம் 1,601 மாணவர்கள் பங்கேற்பர்.மே 19ல் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் செல்லம்பட்டி மாணவர்கள் 446, சேடப்பட்டி 343, டி.கல்லுப்பட்டி 168, உசிலம்பட்டி 329, கள்ளிக்குடி 106, என மொத்தம் 1,392 பேர் பங்கேற்க உள்ளனர். விரும்பும் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேரும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர்கள் இந்திரா, அசோக்குமார், சுதாகர், ஜெய்சங்கர், திறன்மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், திட்ட மேலாளர் உஷாராணி, உதவிஅலுவலர் சரவணன் முருகன், கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ பங்கேற்றனர்.
09-May-2025