உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லுாரி பட்டமளிப்பு விழா

கல்லுாரி பட்டமளிப்பு விழா

பெருங்குடி: மதுரை நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 3வது பட்டமளிப்பு நடந்தது. கல்லுாரி தாளாளர் ஜெகதீசன் துவக்கி வைத்தார்.முதல்வர் அர்ஜுனன் ஆண்டறிக்கை வாசித்தார். தலைவர் நாகரத்தினம், அறங்காவலர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.சென்னை தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா 475 மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள, அன்றாடம் உங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இன்று பல்வேறு துறைகளில் பெண்களும் சம அளவில் உயர்ந்து வருகின்றனர், என்றார்.பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !