கல்லூரி மாணவர் பலி
திருமங்கலம் : கருமாத்தூர் மொட்டையா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீமன் 21. தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.ஏ., படித்து வந்தார். ஏப்., 30 இரவு மூணாண்டி பட்டியில் கபடி போட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது ராசு என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.