உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் போட்டி; எஸ்.டி.பி.ஐ., தீர்மானம்

மதுரையில் போட்டி; எஸ்.டி.பி.ஐ., தீர்மானம்

மதுரை : மதுரையில் எஸ்.டி.பி.ஐ., ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடந்தது. வடக்குமாவட்ட தலைவர் பிலால் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் வரும் லோக்சபா தேர்தலில் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ மதுரைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மாநில தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதுரையில் நடந்த மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய கட்சியினர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பொது செயலாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை