நிலத்தடி நீர்மட்டம் சரிவால் கவலை
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு உயராமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இத்தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்த நிலையில் இந்தாண்டு நிலவும் கடும் வறட்சியால் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. ஆடி, ஆவணி மாதங்களில் மழை பெய்யும் பருவங்களில் மழை பெய்யாமல் காற்று, வெயில் அதிகமாக வீசுவதால் வறட்சி நிலவுகிறது. கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் கிணற்று பாசன விவசாயிகளும் தவித்து வருகின்றனர்.