மேலும் செய்திகள்
சாலை மறியல்
13-Sep-2025
எழுமலை : மதுரை மாவட்டம் எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 50, கட்டடத் தொழிலாளியான இவர் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். தினசரி உசிலம்பட்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார். ஆனால் நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அதிகாலையில் அதே ஊரில் மாற்று சமுதாயத்தினர் வசிக்கும் தெருவில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சுப்பிரமணி இறந்து கிடந்தார். அவரை கொலை செய்துவிட்டனர் எனக் கூறி, நேற்று காலை 8:00 மணிக்கு திரண்ட கிராம மக்கள் எழுமலை - எம்.கல்லுப்பட்டி ரோட்டில் தடுப்புகளை அமைத்து மறியலில் ஈடுபட்டனர். மதுரை எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார், தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். எஸ்.பி., பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததால், 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தை கைவிட்டனர். போலீசார் சுப்பிரமணியின் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சுப்பிரமணி இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.
13-Sep-2025