உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை தபால்தந்தி நகரில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் கிளைத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செயலாளர் குமார் வரவேற்றார். கிளை அபிவிருத்தி குறித்து பொருளாளர் நடராஜன் பேசினார். உறுப்பினர் சேர்க்கை, மாநிலத் தலைவர் ஹரி முத்தய்யர் தலைமையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட உபதலைவராக வெங்கடேசன், இணைச் செயலாளராக குமார் நியமிக்கப்பட்டனர். மாவட்ட தலைவர் ரவி, நிர்வாகிகள் ரமேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை