ஒப்பந்தப்பணி: தனிநபர் தர்ணா
திருமங்கலம்: கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் குராயூர், கல்லணை உள்ளிட்ட கிராமங்களில் கண்மாயை துார்வாருதல், பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கனிமவள நிதியின் கீழ் அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்ததாரர்களை நியமிக்க கள்ளிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பணிகள் குறித்து அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தெரிவிக்கவில்லை. ஒப்பந்த பணிகள் குறித்து டெண்டர் விடாமல், தனிப்பட்ட நபரை தேர்ந்தெடுத்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான பணிகளை வழங்கியதால் அரசுக்கு ரூ. 20 லட்சம் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி சுந்தரம் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அரைமணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் சமரசம் செய்தனர்.