உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு

மதுரை மத்திய சிறையில் ஊழல் எஸ்.பி., முன்ஜாமின் மனு

மதுரை : மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில்களுக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் முன்னாள் கண்காணிப்பாளர் ஊர்மிளா தாக்கல் செய்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.இச்சிறையில் கைதிகள் மூலம் மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர்கள் தயாரித்தல், புத்தக பைண்டிங் உட்பட பல்வேறு தொழில்கள் நடக்கின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். இவர் தற்போது கடலுார் சிறை கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.இவரது பணிக் காலத்தில் 2019 முதல் 2021 வரை மூலப்பொருட்கள் பல தனியார் நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்பட்டன. சில நிறுவனங்கள் பொருட்களை வினியோகித்தது போல் போலி பில்கள் தயாரித்து சிறை நிர்வாகத்திற்கு வழங்கின. இதன்மூலம் ரூ.1.63 கோடி வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஊர்மிளா உட்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்தனர். உயர்நீதிமன்றக் கிளையில் ஊர்மிளா முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.தனபால் விசாரணையை ஜன.6க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை