உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றம் உத்தரவு 

 கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரை சக்திவேல், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை சர்வேயர் காலனி கொடிக்குளம் பாரத்நகரில் அரசு புறம்போக்கு கண்மாயை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அகற்றக்கோரி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜாராம் ஆஜரானார். அரசு வழக்கறிஞர் வைரம் சந்தோஷ்,'குறிப்பிட்டுள்ள சர்வே எண்கள் கண்மாய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. நில அளவீடு பணி மேற்கொள்ளப்படும்,' என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுரை வடக்கு தாசில்தார் நில அளவீடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அளவீட்டின்போது ஆக்கிரமிப்பு இருப்பது உறுதியானால் சட்டப்படி நடைமுறைகளைப் பின்பற்றி அகற்ற வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை