விபத்தில் நொறுங்கிய கார்
மேலுார் : மேலுார் அன்னை சத்யா நகர் அறிவழகன் 40. நாடக நடிகர். நேற்று முன்தினம் இரவு திருப்பத்துாரில் இருந்து மேலுாருக்கு காரை ஓட்டி வந்தார். கீழையூர் அருகே மதுரையில் இருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் மோதியதில் கார் நொறுங்கியது. சிறு காயங்களுடன் அறிவழகன் தப்பினார். 3 மாதங்களுக்கு முன்புதான் இக்காரை அவர் வாங்கியுள்ளார்.