உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்

கோயில் காளைகளால் பாதிக்கப்படும் பயிர்கள்

மேலுார்: கொட்டகுடியில் கோடை விவசாயமாக நெல், வாழை, கரும்பு, கத்தரி பயிரிட்டுள்ளனர். இதை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட காளைகள் சாப்பிடுவதால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயி குருமூர்த்தி: இரவு பகலாக வயலில் காத்து கிடந்தும் காளைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. சொசைட்டியில் வாங்கிய கடன்களை கட்ட முடியாத நிலை உள்ளது. தாசில்தார் ஆய்வு செய்து கோயில் காளைகளை ஏலம் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை