மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி நிர்வாக பதவி விண்ணப்பிக்க கால அவகாசம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல், நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்து இருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிக்க சட்டதிருத்த மசோதா, கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்களை 'https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சிக்கு https://tn.gov.in/dtp அல்லது hhttps://dtp.tn.goc.inஎன்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வசிக்கும் பேரூராட்சி எல்லைக்குள் தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடம், நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி கமிஷனரிடம் நேரடியாக, தபால் மூலமாக ஜூலை 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.