உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கோடவுனில் டாஸ்மாக் ஊழியர்சங்கம் மற்றும் கூட்டமைப்பின் மாநில தலைவர் பாலச்சந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் புயல் வெள்ளத்தின்போது டாஸ்மாக் கடையை திறக்க சென்று வெள்ளத்தில்சிக்கி இறந்த ஊழியர் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். மழை வெள்ளத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் பணி செய்ய உத்தரவிட்டு உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ