உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பகவதி அம்மன், சோலை ஆண்டவர் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு ஏப். 6 ல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர்.நேற்று பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பூத்தட்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு கோயிலில் இருந்து பூஜாரி கரகம் எடுத்து சென்று பாண்டாங்குடி பூசத்தாய் ஊருணியில் கரகத்தை கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெற்றது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி