உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் மனுத்தாக்கல்

தி.மு.க., மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் மனுத்தாக்கல்

மதுரை : மதுரை மாநகராட்சி தி.மு.க., மேயர் வேட்பாளர் பாக்கியநாதன் நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். காலை 11.30க்கு தி.மு.க.,வினருடன் மாநகராட்சி அலுவலகம் வந்தார். மத்திய அமைச்சர் அழகிரி, மாவட்ட செயலாளர் மூர்த்தி, நகர்செயலாளர் தளபதி, பொன்முத்துராமலிங்கம் உடன் வந்தனர். பாக்கியநாதன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய, தேர்தல் அலுவலர் நடராஜன் பெற்றுக்கொண்டார். மாற்று வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா மனுத்தாக்கல் செய்தார்.சொத்துவிபரம்: தன் பெயரில் 13 லட்சத்து 62 ஆயிரத்து 117 ரூபாய், மனைவி நாகலட்சுமி பெயரில் ஐந்து லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு அசையும் சொத்து, தன் பெயரில் 16 லட்சத்து 14 ஆயிரத்து 720 ரூபாய், மனைவி பெயரில் எட்டு லட்சத்து, 1,087 ரூபாய்க்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார். தன் மீது வழக்குகள் இல்லை என தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.,வினர் மனுதாக்கல் செய்தபோது, அதிகாரி அறையில் 30 பேர் இருந்தனர். நிறைய வாகனங்களும் வேட்பாளரோடு வந்தன. ஆனால் தி.மு.க.,வினர் விதிமுறைப்படி மனு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை