உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சியில் 19 வார்டுகளுக்கானதேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு :ஐகோர்ட் கிளையில் தாக்கல்

மாநகராட்சியில் 19 வார்டுகளுக்கானதேர்தலை நிறுத்தக் கோரி வழக்கு :ஐகோர்ட் கிளையில் தாக்கல்

மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில் வார்டு இடஒதுக்கீடு பட்டியலை ரத்து செய்யவும், ஏதாவது 19 வார்டுகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்கவும் கோரி ஐகோர்ட் கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.மதுரை ஆதிதமிழர் மக்கள் கட்சி நிறுவனர் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த வழக்கு: மாநகராட்சியில் ஏற்கனவே 72 வார்டுகள் இருந்தன. அதில் 24 வார்டுகள் பெண்களுக்கும், 6 ஆறுகள் தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கப்பட்டன. தற்போது மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டின்படி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்டோருக்கு 19 வார்டுகள் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவேயிருந்தது போல 6 வார்டுகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது சட்ட விரோதம். மாநகராட்சி வார்டு இடஒதுக்கீடு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். ஏதாவது மாநகராட்சி 19 வார்டுகளுக்கான தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ரஜினி தாக்கல் செய்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி