உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் மீண்டும் முற்றுகை

மாற்றுத்திறனாளிகள் மீண்டும் முற்றுகை

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்நேற்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்திமாவட்ட தலைவர் வீரமணி தலைமையில்திரண்ட பலர் அலுவலககேட் முன்பாக ரோட்டில் அமர்ந்துமாலை வரைஆர்ப்பாட்டம் செய்தனர்.கலெக்டர் நேர்முக உதவியாளர் சந்திரசேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் 'பிப்.10 -15க்குள் கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்'எனஉறுதியளித்ததால் கலைந்தனர்.நேற்று கலெக்டரை சந்திக்க முயன்றனர். அதேநேரம் கலெக்டர் சங்கீதா நுகர்வோர் மன்றம் தொடர்பான கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். கூட்டம் முடிய தாமதமானதால், மாற்றுத்திறனாளிகள் கோஷமிட்டபடி கலெக்டரின் கார் நிறுத்தியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்தி முடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை