உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சள் பூசணியில் நோயின் தாக்கம்

மஞ்சள் பூசணியில் நோயின் தாக்கம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதியில் மஞ்சள் பூசணி பயிர்களின் இலைகள், காய்களில் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.கீழக்குயில்குடி விவசாயி சிவகுமார் கூறியதாவது: ஏராளமான விவசாயிகள் மஞ்சள் பூசணி பயிரிட்டுள்ளனர். நான் 50 சென்ட் நிலத்தில் பயிரிட்டு 75 நாட்களாகிறது. பூக்களும் பிஞ்சுகளும் ஏராளமாக உள்ளன. இன்னும் 10 முதல் 15 நாட்களில் காய்கள் அறுவடை ஆகும் நிலையில் இருந்தது. இந்நிலையில் இலைகள் பழுத்தும், காய்கள் சுருங்கியும் விட்டன. எந்த மருந்து தெளித்தாலும் தீர்வு கிடைக்கவில்லை.ரூ. 20 ஆயிரம் செலவு செய்துள்ளேன். முழுவதும் நஷ்டமாகிவிடும் என்ற நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் ஈடுபட பயமாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை