உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிரதமர் பாதுகாப்பு பணி போலீசுக்கு கெட்டுப்போன உணவு வினியோகம்

பிரதமர் பாதுகாப்பு பணி போலீசுக்கு கெட்டுப்போன உணவு வினியோகம்

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, பிரதமர் மோடி நேற்று வந்தார். அவர் வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, ஹெலிபேட் உள்ள கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதி வரையிலும், பஞ்சக்கரையில் இருந்து கோவிலுக்கு செல்லும் வரையிலும், 3,500க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.இந்த பாதுகாப்பு பணி போலீசாருக்கு நேற்று வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போய் இருந்ததாக கூறப்படுகிறது. பிரதமர் பாதுகாப்பு பணியில் இருந்ததாலும், ஸ்ரீரங்கம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாலும் பெரும்பாலான போலீசார், சாப்பிடாமலேயே பணியில் ஈடுபட்டனர் என்றும் கூறப்படுகிறது. கடந்த முறை பிரதமர் வருகையின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு கெட்டுப் போய் இருந்ததாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், நேற்றும், அதே சம்பவம் நடந்துள்ளதாக கூறுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ