உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்

பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் அருகே மேற்கு ஒன்றியம் வல்லக்குளத்தில் புதிதாக கட்டிய அங்கன்வாடி மையம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் அடிப்படை வசதிகள் இல்லாத வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றியம் சார்பில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ரூ.16.55 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை மையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. நெருக்கடியான இடத்தில் செயல்படும் மையத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். மேற்கு ஒன்றிய அதிகாரிகள் மையத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை