உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமண மண்டபங்களுக்கான வரி விதிப்பில் தில்லுமுல்லு ; மாநகராட்சிக்கு ரூ.பல கோடி வருவாய் இழப்பு

திருமண மண்டபங்களுக்கான வரி விதிப்பில் தில்லுமுல்லு ; மாநகராட்சிக்கு ரூ.பல கோடி வருவாய் இழப்பு

மதுரை : மதுரையில் திருமண மண்டபங்கள் சதுர அடிகளின் அளவை குறைத்து காட்டி பல ஆண்டுகளாக ரூ. கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது குறித்து மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் கண்டறிந்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.மாநகராட்சிக்கு வர வேண்டிய வரி வருவாய் ரூ. பல கோடி நிலுவையில் உள்ளது. கமிஷனர் உத்தரவில் வரிவசூல் பண முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பைபாஸ் ரோட்டில் ஒரு வர்த்தக நிறுவனம் ரூ.1.37 கோடி, கல்யாண மண்டபம் ரூ. 73.82 லட்சம் வரிப்பாக்கி வைத்திருந்ததால் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்புகளை மாநகராட்சி துண்டித்தது.இந்நிலையில் நகரில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள் சதுர அடிகளை குறைத்து காட்டி வரிஏய்ப்பு செய்து பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கமிஷனருக்கு புகார் சென்றது. இதையடுத்து 300க்கும் மேற்பட்ட மண்டபங்களில் மாநகராட்சி குழு ஆய்வு செய்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. 16 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்ட ஒரு மண்டபம் 3 ஆயிரம் சதுர அடிக்குமட்டுமே 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்தியுள்ளது. தேனி ரோட்டில் ஒரு மண்டபம் 12 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டு 5 ஆயிரம் சதுர அடிக்கு மட்டுமே வரி செலுத்தியுள்ளது. இதுபோல் 100க்கும் மேற்பட்ட மண்டபங்கள் பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்த விதிமீறலில் மாநகராட்சிஅலுவலர்களும் உடந்தையாக இருந்து மண்டப உரிமையாளர்களிடம் மாதம் ரூ.பல ஆயிரம் 'மாமூல்' பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது. விதிமீறல் மண்டபங்களுக்கு அபராதம் விதித்து கமிஷனர் மதுபாலன் உத்தரவிட்டுள்ளார்.அதிகாரிகள் கூறுகையில், ஒரு பெரிய மண்டபத்திற்கு ஒரு சிறிய வீடு அளவிற்கு சதுர அடிகளை சுருக்கி கணக்கு காட்டி நுாதனமாக வரிஏய்ப்பு நடந்துள்ளது. விதிமீறல் மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்புசாமி
ஜன 11, 2024 06:30

எல்லாருக்கும் எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்தப் படுள்ளது. அவனவன் எவ்ளோ வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம். திருட்டு திராவிட மாடல். தமிழர்கள் விரைவில் பணக்காரர்களாகிடுவாங்க. சீகிரமாவே வல்லரசாயிடுவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை