உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

திருப்பரங்குன்றம்: தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டம் நடந்தது. செயலாளர் மணிமாறன் பேசுகையில், ''ஒவ்வொரு பூத் அருகில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேரை தி.மு.க.,வில் இணைக்க வேண்டும். அமைச்சர் மூர்த்தி கூறியதுபோல் மதுரையில் உள்ள 10 தொகுதிகளையும் நாம் வென்றெடுக்க வேண்டும். அதில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்றார்.இளைஞரணி அமைப்பாளர் விமல், தொகுதி பொறுப்பாளர் வனராஜன், நிர்வாகிகள் கிருஷ்ணாபாண்டி, வேட்டையன், ஆறுமுகம், சுந்தர், மாநகராட்சி மண்டல தலைவர்சுவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி