உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., திட்டங்களுக்கு ஈயம் பூசும் தி.மு.க.,

அ.தி.மு.க., திட்டங்களுக்கு ஈயம் பூசும் தி.மு.க.,

மதுரை: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஈயம் பூசி தி.மு.க.,வினர் செயல்படுத்துகின்றனர்' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் தீர்க்க முடியாத பிரச்னைகள் எல்லாம் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 45 நாளில் தீர்வு காண முடியும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை ஜாமினில் இருக்கும் பொன்முடிக்கும், செந்தில்பாலாஜிக்கும் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா. கள்ளச் சாராய மரணம், லாக்கப் மரணங்கள், பாலியல் தொல்லை, போதைப் பொருள் கடத்தல் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தன் மருமகன் சபரீசனை காக்க பா.ஜ., வுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார் ஸ்டாலின்.அ.தி.மு.க., ஆட்சியில் 64 ஆயிரம் அம்மா முகாம் மூலம் 64 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். அந்த திட்டத்தையே தி.மு.க., தற்போது ஈயம் பூசி செயல்படுத்துகிறது. காருக்கு நம்பர் பிளேட் மாற்றி ஏமாற்றுவது போல் அன்றைக்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறார் ஸ்டாலின் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி