| ADDED : ஜன 01, 2024 05:37 AM
மதுரை: மதுரையில் பொன்னியின் செல்வன் அன்ட் பிரண்ட்ஸ் சார்பில் 'அரங்காயணம்' என்ற ஆவணப்படம் சேதுபதி பள்ளியில் இலவசமாக திரையிடப்பட்டது. மாணவர்கள், மக்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.படத்தின் இயக்குநர் பாம்பே கண்ணன் கூறியதாவது: இது ஒரு தெய்வீக ஆவணப்படம். 14ம் நுாற்றாண்டில் திருவரங்கம் கோயில் அந்நிய படையெடுப்பால் சூறையாடப்பட்ட தருணத்தில் ஆச்சாரியார் பிள்ளை லோகாச்சாரியார் தலைமையில் 52 பக்தர்கள் குழு, அழகிய மணவாளனை சுமந்துகொண்டு காடு, மலை என கஷ்டப்பட்டு 48 ஆண்டுகள் காப்பாற்றி திருவரங்கம் திரும்பி வந்த சரித்திர நிகழ்வின் கருதான் இந்த ஆவணப்படம்.இப்படம் இதுவரை ஸ்ரீரங்கம், மெல்போர்ன், கலிபோர்னியாவை அடுத்து மதுரையில் நான்காவது முறையாக இலவசமாக திரையிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் திரையிட்டு அரங்கன் அருளை மக்கள் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் சபாக்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் திரையிட விரும்பினால் 98411 53973ல் தொடர்புகொள்ளலாம், என்றார்.