உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீரா... குமட்டல் தரும் நீரா...

குடிநீரா... குமட்டல் தரும் நீரா...

இப்பகுதியில் ஆனந்த நகர், அமிர்தா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பல ஆண்டுகளாக பாதாளச் சாக்கடை வசதி இல்லை. வைகை குடிநீர் எச்.எம்.எஸ்., காலனி டேங்கில் ஏற்றப்பட்டு இப்பகுதிகளுக்கு வினியோகிக்கும் போது பல இடங்களில் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் பெரும்பாலான நாட்களில் குடிநீர் துர்நாற்றத்துடனும், கலங்கிய நிலையில் கறுப்பு நிறத்திலும் வருகிறது. குடித்தால் குமட்டல் வருவதாக புகார் கூறுகின்றனர். குடிநீருக்கான கட்டணம் செலுத்தியும் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.ஆனந்தநகர், அமிர்தாநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது: ஓராண்டுக்கும் மேலாக இப்பிரச்னை உள்ளது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் குழாய் உடைப்பு எங்கு ஏற்பட்டது என கண்டுபிடிக்க முடியவில்லை என பதில் கூறாமல் இழுத்தடிப்பதால் தற்போது வரை தீர்வு கிடைக்கவில்லை. இதனால்குடிநீரை விலைக்கு வாங்குகிறோம். 11 ஆண்டுகளாக பாதாளச்சாக்கடை வசதி இல்லை. ஆனால் அதற்கான வரி ஒவ்வொரு வீட்டிற்கும் மாநகராட்சி நிர்ணயித்து அதை நிலுவையில் உள்ளதாக காண்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார் அனுப்பி வருகிறோம் என்றனர். கமிஷனர் சித்ரா இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை