உள்ளூர் செய்திகள்

பூமி பூஜை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பேரணை, மேலக்கால் சாலையில் ரூ.2.65 கோடி மதிப்பில் 5 கி.மீ., சாலைப் பணிக்கான பூமி பூஜை மன்னாடிமங்கலத்தில் நடந்தது.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். விவசாய அணி முருகன், பொதுக்குழு ஸ்ரீதர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் சத்தியபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் கவுதம் வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிர்வாகிகள் சரவணன், ராஜா, திருமுருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி