| ADDED : பிப் 22, 2024 06:27 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டக் கிளையின் 14வது அமைப்பு தேர்தல் சகாய தைனேஸ், முத்துப்பாண்டியன் முன்னிலையில் நடந்தது.இதில் தலைவர் முருகேசன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் எமிமால் ஞானசெல்வி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாநில செயற்குழு உறுப்பினராக முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்களாக அருள்தாஸ், ஹெலன் தெரசா, ஜெயசித்ரா, மாவட்ட துணைத் தலைவர்களாக ராஜமாணிக்கம், பாண்டிமாதேவி, அமலி, துணை செயலாளர்களாக வாசுதேவன், மணிமேகலை, சங்கர், கல்வி மாவட்ட அலுவலர்களாக ஞானசேகரன், தனபாக்கியம் (மேலுார்), சிவக்குமார், ரீட்டா (மதுரை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.