உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு ஷோவில் மின்வாரிய ஊழியர்கள் முதல்வரிடம் மனு காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

ரோடு ஷோவில் மின்வாரிய ஊழியர்கள் முதல்வரிடம் மனு காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

மதுரை: 'மதுரை பெருநகர் வட்டத்தில் காலியாக உள்ள 87 சதவீத பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்' என்று ரோடு ஷோவில் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மின்வாரிய ஊழியர்கள் மனு கொடுத்தனர்.மதுரை அரசரடி வழியாக வந்த முதல்வரிடம் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் சவுந்தரபாண்டியன், அறிவழகன், இம்மானுவேல் தனபாலன், ரிச்சர்ட் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:மதுரை மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க, களப்பணி காலியிடங்களில் கள உதவியாளர்களை நியமிக்க வேண்டும். பெருநகர் வட்டத்தில் அனுமதிக்கப்பட்ட கம்பியாளர் (ஒயர்மேன்) பணியிடம் 268. இதில் 208 பணியிடங்கள் காலியாக உள்ளன. களஉதவியாளர் பணியிடங்கள் 316 ல் 299 காலியாக உள்ளது. மொத்தம் 584 பணியிடங்களில் 507 காலியாக உள்ளன.பெருநகர் வட்டத்தில் 87 சதவீத பணியிடம் காலியாக உள்ள நிலையில், மீதியுள்ள 13 சதவீத பணியாளர்களே அனைத்துப் பணிகளையும் செய்கின்றனர். தரமாக பணியாற்றி, தடையற்ற மின்சாரம் வழங்கவும், மன உளைச்சலோடு பணியாற்றும்ஊழியர்களை காத்திட, உயிர் இழப்புகளை தவிர்க்கவும், காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.மின்வாரியத்தில் கடைநிலைப் பணிகளை செய்து வரும் கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். 1.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.நிர்வாகிகள் கூறுகையில், ''கடந்த ஒரு மாதத்தில் 2 ஊழியர்கள் பணியாற்றிய போது இறந்துள்ளனர். இதுபோன்ற நிலைமையை தவிர்க்க கூடுதல் ஊழியர்களை உடனே நியமிப்பது அவசியம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி