உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிளாஸ்டிக்கை ஒழி மஞ்சப்பையை பிடி

பிளாஸ்டிக்கை ஒழி மஞ்சப்பையை பிடி

சோழவந்தான்:சோழவந்தானில் நகரங்களின் துாய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் வணிக நிறுவனங்கள், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டது. வாடிக்கையாளர்களிடம் மஞ்சள் பையில் பொருட்கள் வாங்க அறிவுறுத்த வேண்டுமென கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில் பணியாளர்கள் வீடுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மஞ்சள் பை விநியோகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !