26 பேருக்கு வேலை
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் சார்பில் ஒவ்வொரு மாத கடைசி வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. நேற்றைய முகாமல் 26 மாற்றுத்திறனாளி களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. நியமன ஆணைகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சுவாமிநாதன், வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன் வழங்கினர்.