உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்து உள்ளது. அக்.11,12ல் தொழில்முனைவோர் சோலார் எனர்ஜி பயிற்சி நடை பெறும். கட்டணம் ரூபாய் 3540. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, பதிவு நடைமுறை, வரித்தாக்கல் செய்வது உள்ளிட்டவை குறித்த பயிற்சியில் சேர கட்டணம் ரூ.2360. 18 வயது நிரம்பிய 12-ம் வகுப்பிற்கு மேல் இருபாலரும் பங்கேற்கலாம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறும். முன்பதிவுக்கு 86956 46417, 86670 65048ல் தொடர்பு கொள்ளலாம். ஒரு பாஸ்போர்ட் போட்டோ, ஆதார், கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி.,/ எஸ்.டி., வகுப்பினராக இருந்தால் அதன் சான்று கொண்டு வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !