உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண் பரிசோதனை முகாம்

கண் பரிசோதனை முகாம்

வாடிப்பட்டி : கச்சைகட்டியில் ஊராட்சி கிராம வளர்ச்சி தொண்டு நிறுவனம், மனிதநேய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம், ஆதி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. நிர்வாகி முருகபாண்டி தலைமை வகித்தார். மைய நிறுவனர் அசரப் அலி முன்னிலை வகித்தார். மருத்துவமனை நிர்வாக இயக்குநர்கள் திருமலை குமார், தெய்வ பிரியா தலைமையில் மருத்துவக் குழுவினர் 120 பேருக்கு பரிசோதனை செய்தனர். 15 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யபட்டனர். நிர்வாகி லட்சுமணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ