உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி

வைகை தண்ணீர் எப்போது வரும் விவசாயிகள் கேள்வி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது. விவசாயிகள் மாரிச்சாமி, பாண்டியன், சிவராமன், பெரிய தேவர், மகாமுனி பேசியதாவது: மாடக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் நீர் வரத்து கால்வாயில் ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகள் விடப்படுகின்றன. கால்வாய் தடுப்புச் சுவரை துளையிட்டும், சுவர் மேல் குழாய் பதித்தும் கழிவுகளை வரத்து கால்வாயில் விடுகின்றனர். தென்கால் கண்மாய் கரையில் தார் சாலை அமைக்க கரையில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணின் ஒரு பகுதி கண்மாய்க்குள் கொட்டப்பட்டது. வைகை அணை தண்ணீர் கண்மாய்க்கு வருவதற்குள் அகற்ற வேண்டும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வருவதற்காக முதல் கட்டமாக அளவீடு செய்யும் பணி, மண் மாதிரியும் ஓராண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அதன் பின்பு எந்த பணியும் நடக்கவில்லை. கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மற்றவை அடைப்பட்டு விட்டன. அந்த கால்வாய்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ