உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை; முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

விவசாயிகளுக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை; முன்னாள் அமைச்சர் சொல்கிறார்

சோழவந்தான் : 'தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை'' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.சோழவந்தானில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து 'யார் அந்த சார்' என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை டூவீலர், உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, ஒன்றிய செயலாளர் கணேசன், ஜெ., பேரவை நிர்வாகிகள் தனராஜ், ராஜேஷ் கண்ணா பங்கேற்றனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறியதாவது: தென் மாவட்ட வளர்ச்சிக்கு முக்கியமான மதுரை- துாத்துக்குடி ரயில் பாதை திட்டம் தி.மு.க., அரசின் கையாலாகா தனத்தால் ரத்தாகிறது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகளில் டோக்கன் கிடைக்கவில்லை என மாடு வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள் தெருத்தெருவாக அலைகின்றனர். அமைச்சர் மூர்த்தி மொத்த டோக்கனையும் எடுத்துச் சென்று விட்டார். ஆன்லைனில் புள்ளி விவரம் வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் பதிவு செய்தவர் விவரங்களை வெளியிட முடியுமா, தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுத்தீர்களா. அதற்கு பதில் இல்லை.நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் திட்டத்தை வரவிடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய பிறகுதான் 500 பேராக இருந்த போராட்டம் 50 ஆயிரம் பேராக திரண்டு வந்தனர். இது விவசாயிகளுக்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை