உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உழவர் சந்தை ஆண்டு விழா

 உழவர் சந்தை ஆண்டு விழா

மதுரை: மதுரை அண்ணாநகர் உழவர் சந்தையின் 26 ம் ஆண்டு நிறைவு விழா வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தலைமையில் நடந்தது. தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பிரபா, மதுரை விற்பனைக் குழு செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தனர். வேளாண் விற்பனைக் குழு வாரிய முன்னாள் தலைவர் கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், வாங்கும் நுகர்வோர்கள் கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் இலவச மரக்கன்று வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி