தினக்கூலி எதிர்பார்க்கும் உழவர் சந்தை பணியாளர்
மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை காவலர்கள், துாய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் திராவிட மாரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஈஸ்வரன் பங்கேற்றனர். நிர்வாகி மதியழகன் வரவேற்றார். நிர்வாகிகள் சரவணன், மகேந்திரன், விஜயலட்சுமி, சித்ரா, முத்துச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திராவிடமாரி கூறுகையில், 'ஒவ்வொரு உழவர் சந்தையிலும் 3 காவலர்கள், ஒரு துாய்மை பணியாளர் என பலதரப்பினரும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறோம். இந்நிலையை மாற்றி, எங்களுக்கான மாத ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் கலெக்டர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.