மேலும் செய்திகள்
மகள்களின் 'சுதந்திரம்' எந்த எல்லை வரை?
23-Sep-2024
மதுரை:மதுரை, யாகப்பா நகர் சென்றாய பெருமாள் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சேதுபதி, 35, பெயின்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி, 29. இவர்களது மகள்கள் ரக் ஷனா, 7, ரக் ஷிதா, 5. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்தது. இதனால் மனைவி அருகில் உள்ள தன் தாய் வீட்டிற்கு செல்வதும், சேதுபதி சமரசம் செய்து அழைத்து வருவதும் தொடர்ந்தது.நேற்று காலை ராஜேஸ்வரி, டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்றார். இவரது தாய் வீட்டில் இரு மகள்களும் துாங்கிக் கொண்டிருந்தனர்.மாமியார் வீட்டிற்கு வந்த சேதுபதி, இரு மகள்களின் கழுத்தில் கத்தியால் குத்திக் கொன்றார். தந்தையே ஈவு, இரக்கமின்றி கத்தியால் கழுத்தில் குத்தியதால், அலறித் துடித்த மகள்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பின், டைப்ரைட்டிங் வகுப்பிற்கு சென்று ராஜேஸ்வரியை அழைத்து வந்தார். 'குழந்தைகள் எங்கே' என, அவர் கேட்டபோது 'உள்ளே போய் பார்' என்று மட்டும் கூறி விட்டு, மற்றொரு அறைக்கு சென்று விட்டார்.குழந்தைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் அலறிய ராஜேஸ்வரி, என்ன நடந்தது என கேட்பதற்காக கணவரை தேடியபோது, அடுத்த அறையில் சேதுபதி, சேலையால் துாக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார். கணவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு ராஜேஸ்வரி துாக்கிச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
23-Sep-2024